உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 36 ஆசிரியர்கள் மயக்கம்!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களில் 36 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
சரியான ஊதியம் வழங்க வேண்டுமென்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கைவைத்து இன்று 3வது நாளாகவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் டி.பி.ஐ. வளாகத்திலுள்ள, ஆரம்பக்கல்வி இயக்குநர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட் ஆசிரியர்களில் இன்று (புதன்கிழமை) 6 பேர் மயக்கம் அடைந்தநிலையில், மொத்தம் 36 பேர் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் சென்னை அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரை்.
இந்நிலையில், நேற்று இரவு முதல் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பொலிஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளனர்.
தமிழக அரசு பாடசாலைகளில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குமிடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.
இந்நிலையில், அரையாண்டு பரீட்சை முடிந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
சரியான ஊதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.