கிளிநொச்சியில் தொடரும் சீரற்ற காலநிலை – மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம்!
கிளிநொச்சியில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
இரவு முதல் இடையிடையே பலத்த மழை பெய்து வந்தது. இன்று காலை 9 மணிக்க பின்னர் தொடர்க்கியாக மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்தோடி வந்த நிலையில் மக்கள் நேற்று படிப்படியாக வீடுகளிற்கு திரும்ப ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இன்று பெய்துவரும் அதிக மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தாழ் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் நிறைந்து வருகின்றன.
முகாம்களில் தங்சமடைந்தவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.