கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை காரணமாக மக்கள் மீண்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை 9 மணி முதல் பலத்த மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக சில பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின.
கிளிநொச்சி ஆனந்தபுரம், பொன்னநர், இரத்தினபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளம் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சென்றது.
மாவட்டத்தில் தொடர்ந்தும் சில பகுதிகளில் முகாம்களில் மக்கள் தங்கி உள்ளனர். வெள்ளம் வடிந்த நிலையில் வீடுகளிற்கு செல்ல ஆரம்பித்த மக்கள் இன்று மீண்டும் பெய்த மழை காரணமாக முகாம்களிற்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயம், திருமுறிகண்டி இந்து வித்தியாலயம், பொன்னகர் சிவபாத கலையகம், பன்னங்கண்டி அ.த.க பாடசாலை உள்ளிட்ட 16 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 55000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.