கேரள கஞ்சாவுடன் காங்கேசன்துறை கடற்படை சிப்பாய் கைது!
கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸர்ரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 27 கிரேம் 7 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாகவும் , அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்,