பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வவுச்சர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்கும் 43 இலட்சம் மாணவர்களும் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் இதற்காக செலவிடப்படும் தொகை 280 கோடி ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.