நத்தார் தினத்தில் தென்னிலங்கையை உலுக்கிய கொடூரம்!

நத்தார் தினத்தில் தென்னிலங்கையை உலுக்கிய கொடூரம்!

தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் நேற்று காலை இரண்டு நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பெருந்தொகையான மக்கள் பார்த்து கொண்டிருந்த வேளையில் மர்மநபர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் வர்த்தக துறையை கட்டியெழுப்பும் லதிஷ் உதயகுமார எனப்படும் ரனா என்ற வர்த்தகரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களில் ரனாவும் ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த கொலையின் பின்னர் தங்காலை திக்வெல்ல உட்பட சுற்றுப்புற பகுதியில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கொலையாளிகளை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட ரனாவின் தந்தையான மஹிந்த என்பவர் திக்வெல்ல துறைமுகத்தில் பிரதான வர்த்தகர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மஹிந்த என்ற வர்த்தகருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மீன் வர்த்தகத்திற்கு தொடர்புடைய பாரிய அளவிலான 21 ட்லோலர் படகுகளுக்கு சொந்தக்காரர்களாகும்.

நேற்று காலை கலன என்ற படகில் கொண்டுவரப்பட்ட மீன் தொகையை விற்பனை செய்யும் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரனா தனது ஊழியர்களுக்கு படகில் மீன் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

முகத்தை மூடிய ஹெல்மட் அணிந்திருந்த இருவரும் படகு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நுழைந்து டீ 56 துப்பாக்கி மற்றும் 9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளை பயன்படுத்தி நாலா பக்கமும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தையடுத்து துறைமுகத்தில் இருந்த வர்த்தகர்கள் மற்றும் மீன் கொள்வனவு செய்ய வந்த மக்கள் தப்பியோடியுள்ளனர்.

கொலையாளிகள் இருவரும் கலன படகு மற்றும் அதற்கு அருகில் இருந்த அனைவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், விழுந்து கிடந்த ரனா அருகில் சென்று அவரது தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 8 பேர் தங்காலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு 16 வயதான இளைஞர் ஒருவரும் உள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலையை செய்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று இடையில் மோட்டார் வாகனம் ஒன்றில் ஏறிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரனாவின் தந்தை மஹிந்த மற்றும் குடாவெல்ல துறைமுகத்தில் இன்னும் ஒரு பிரதான வர்த்தகருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்து மோதலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதலின் முடிவாக இதற்கு முன்னர் மஹிந்தவின் சகோதரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துறைமுகத்தின் கட்டுப்பாட்டை மஹிந்த மற்றும் அவரது மகன்கள் கைப்பற்றியுள்ளமையினால் எதிர் தரப்பு வர்த்தகருடன் மோதல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக தொடரும் இரு தரப்பு மோதலில், ரனா மேற்கொண்ட தாக்குதலில் எதிர்தரப்பு நபர் ஒருவர் ஊனமுடையவராகியுள்ளார். அத்துடன் இந்த மோதலில் பின்னர் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரனா வழங்கிய தகவலுக்கமைய திக்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் ரனாவின் எதிர் தரப்பு வர்த்தகருடன் நெருக்கமானவர் என விசாரணைகளில் தெரியவந்து்ளது.

இந்த மோதல்களை அடிப்படையாக கொண்ட இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளார்.

இந்தகொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 11 குழுக்கள் அனுப்பி வைக்க்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net