மாந்தையில் கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு!

மாந்தையில் கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு!

மாந்தை – ஆட்காட்டி வெளி, பருப்புக் கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியூடாக சென்ற பங்கு மக்கள் குறித்த சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதைபங்குத்தந்தை அருட்தந்தை ச.சத்தியராஜ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பங்குத்தந்தை நிலைமையை பார்வையிட்டதோடு, மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியதோடு, அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net