வீட்டினுள் புகுந்து திருடிய ஒருவர் கைது!
திருகோணமலை – குச்சவெளி பகுதியில் வீடொன்றினுள் புகுந்து ஐந்து பவுண் தங்க நகைகள் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பணத்தை திருடிய சந்தேகநபர் இன்று குச்சவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சலப்பையாறு, குச்சவெளி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குச்சவெளி பகுதியிலுள்ள வீடொன்றினுள் யாருமில்லாத நேரத்தில் வீட்டின் ஓட்டினை கழற்றி வீட்டுக்குள் இறங்கி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.