இன்று முதல் அமுலில் பேருந்து கட்டண குறைப்பு!
பேருந்து கட்டணங்களின் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய நுாற்றுக்கு 4.2 வீதத்தால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அரச மற்றும் தனியார் பேருந்து பயணக்கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 12 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணம் அவ்வாறே அறவிடப்படவுள்ளதுடன், 15 ரூபாய் முதல் 29 ரூபாய் வரையில் காணப்பட்ட கட்டணங்கள் ஒரு ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 41 முதல் 52 ரூபாய் வரையிலான கட்டணங்கள் 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், 206 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம் 197 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.