உடைக்கப்பட்ட புத்தர் சிலையை முஸ்லிம்கள் புனரமைக்க வேண்டும்!

உடைக்கப்பட்ட புத்தர் சிலையை முஸ்லிம்கள் புனரமைக்க வேண்டும்!

மாவனெல்ல பகுதியில் உடைத்து சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகளை முஸ்லிம் மக்களே புனரமைத்து கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் பிற இனத்தவர்களுடன் ஒத்துழைப்புடன் வாழ விரும்புபவர்கள் என்ற அடிப்படையில் நல்லெண்ண அடிப்படையில் தம்மை குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில்இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, புனரமைப்பு பணிகளில் தனது பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அவர், சிலை உடைப்பு குறித்த விசாரணைகளை தடுப்பதற்கு தான் தலையீடு செய்வதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார்.

அத்துடன், தன் மீது அவதூறு செய்திகளை வெளியிட்டு வருபவர்களுக்கும், சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரை கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தர் சிலை உடைப்பு விவகாரத்திற்கு அமைச்சர் கபீர் ஹாசிம் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net