ஒலிம்பிக் பதக்கம் வென்ற பரமி வசந்தவிற்கு வீடு பரிசு!
இளைஞர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பரமி வசந்த மரிஸ்டெல்லாவிற்கு 3 மில்லியன் மதிப்புள்ள வீட்டினை வீடமைப்பு மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கிவைத்தார்.
குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவியான பரமி வசந்த, அர்ஜென்டினாவில் நடைபெற்றுவரும் 2018 ஆம் ஆண்டுக்கான 3வது இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி மகளீருக்கான 2000 மீற்றர் தடைதாண்டலில் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில் வீராங்கனையின் புத்தளம் பகுதியில் வீட்டை புனரமைக்க “சேவான நிதி” லிருந்து 1 மில்லியன் ரூபாயினை அமைச்சர் வழங்கியிருந்தார்.
அத்தோடு வீராங்கனைக்கு மொரட்டுவவில் சுமார் 3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீட்டினையும் அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கிவைத்தார்.