கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை நிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 31ம் திகதியுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு விநியோகம் நிறைவு செய்யப்படும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து நாடுகளுக்கும் செல்லுப்படியாகும் கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டாது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.