கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சிறீதரன்.
கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி பிரதேச மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களான திருநகர் சுரபி முன்பள்ளி, சிவநகர் பாடசாலை, உருத்திரபுரம் மகாவித்தியாலயம் போன்றவற்றுக்கு சிறீதரன் அண்மையில் சென்றுள்ளார்.
இதன்போது அவர், மக்களின் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், அவர்களின் உணவு தேவைகள், சுகாதார தேவைகள் போன்றவற்றை உரிய முறையில் தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.