சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு பணிப்­புரை?

சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு பணிப்­புரை?

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கட்சித் தலை­மை­ய­கத்தை எதிர்­வரும் 2 ஆம் திக­தி­வரை செயற்­ப­டாது மூடு­மாறு அந்தக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தனிப்­பட்ட விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த திங்கட்கிழமை தாய்­லாந்­துக்கு விஜயம் செய்­தி­ருந்தார். வெளிநாடு சென்­றுள்ள ஜனா­தி­பதி எதிர்­வரும் 2 ஆம் திக­தியே நாடு திரும்­ப­வுள்ளார்.

இந்த நிலை­யி­லேயே சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தின் செயற்­பாட்டை இடை­நி­றுத்­து­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பொது­ஜன பெர­மு­ன­வுடன் ஒன்­றி­ணைந்து எதிர்­வரும் தேர்­தல்­களை சந்­திக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைப்­பா­ளர்­களின் கூட்­டத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து சுதந்­தி­ரக்­கட்சி செயற்­பட்டால் தாம் தனித்து சுயா­தீ­ன­மாக செயற்­ப­டப்­போ­வ­தாக கட்­சியின் பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இந்த அமைப்­பாளர் கூட்­டத்தில் பங்­கேற்ற ஜனா­தி­பதி வெ ளிநாடு செல்­வ­தற்­காக இடை நடுவில் வெ ளியே­றி­சென்­ற­தை­ய­டுத்து கட்­சியின் செய­லாளர் பேரா­சி­ரியர் ரோஹன லக்ஷ்மன் பிய­தாஸ உரை­யாற்­றி­ய­போது அவ­ருக்கு கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கூட்­டத்தில் எஸ்.பி. திஸ­நா­யக்க உரை­யாற்­றி­ய­போதும் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. இதனை யடுத்து அவர் கூட்­டத்­தி­லி­ருந்து வெ ளியேறி சென்­றி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும் சுதந்­தி­ரக்­கட்­சியின் போச­க­ரு­மான சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக்கட்சி இணைவதை விரும்பவில்லை.

இந்த நிலையிலேயே தான் நாடு திரும்பும் வரையில் சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறும் செயற்பாடுகளை இடைநிறுத்தும்படியும் ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net