பிரித்தானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!
பிரித்தானிய யுவதி ஒருவரை பாலியல் வல்லுரவிற்கு உட்படுத்த முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள சுற்றுள்ளா விடுதி ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலத்காரம் செய்ய முற்பட்ட இரண்டு இளைஞர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர் செவ்வாய் கிழமை இடம் பெற்றதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
இவ்வாறு 28வயதுடைய பிரித்ததானிய யுவதி மற்றும் அவரின் காதலன் தங்கியிருந்த அறைக்கு அருகில் சந்தேக நபர்களான இருவரும் தங்கியுள்ளனர் பின்னர் குறித் இருவர் நேற்று இரவு மதுபானம் அருந்தி இருந்ததாவும் தெரிவிக்கபடுகிறது.
அதிகாலை பிரித்தானிய ஜோடிகள் தங்கியிருந்த அறைக்கு வந்த இவர்கள் அறையில் இருந்து அவர்களை வெளியேறுமாறு அழைத்துள்ளனர் அதனை தொடர்ந்து குறித்த யுவதியை இரண்டு சந்தேக நபர்களும் பாலத்காரம் செய்ய முற்பட்டதை தொடர்ந்த யுவதியின் காதலன் விடுதியின் முகாமையாளருக்கு அறிவித்துள்ளதாகவும பின்னர் முகாமையளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றுலா விடுதிக்கு வந்த ஹட்டன் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்பட்டு விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் டிக்கோயா பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட நபர்களை 27.12.2018.வியாழகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.