மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு!
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் மூன்றாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில், இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு என்ற தொழிற்சங்கங்களின் அறிவிப்பு தவறு என்று நான் கூறமாட்டேன்.
ஆனால், கம்பனிகள் 600 ரூபாயைவிட சம்பளத்தை அதிகரிக்கப் போவதில்லை எனக் கூறுவதை அங்கீகரிக்க முடியாது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை வழங்க முடியும் என தொழிற்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காண்போம்” எனத் தெரிவித்தார்.