9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சுகாதார உத்தியோகத்தர்கள்.

9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சுகாதார உத்தியோகத்தர்கள். எதுக்குடா உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருது?

முல்லைத்தீவு மாங்குளம் சுகாதார பணிமனையினரின் மோசமான செயற்பாடு தொடர்பில் விசனம் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

வெள்ளம் காரணமாக நோய் தொற்றுக்களை தடுப்பதற்கு கிணறுகளில் குளோரின் இடுவதற்கு சுகாதார ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற சுகாதார ஊழியர்கள் இருவர் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் 9 வயது சிறுவனை கரைக்க பணித்துள்ளனர்.

குளோரின் தொடர்பில் அடிப்படை அறிவு பெற்றுக்கொள்ளாத நிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்படி செயலை தடுக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net