இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்!

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பூநகரி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 18.12.2018 அன்று சபையில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை வாக்குளால் நிறைவேற்றப்பட்டிருந்து.

இதன் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐதேக உறுப்பினருமாக 14 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். எதிராக ஐந்து பேரும், ஒருவர் சமூகமளிக்காதும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அதே வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் 28-12-2018 மீண்டும் சபையில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐதேக உறுப்பினர் ஒருவருமாக 11 பேர் ஆதரவாகவும், ஐந்து பேர் எதிராகவும், மூவர் சமூகமளிக்காமலும் இருந்தனர்.

இதனால் குறித்த வரவு செலவு திட்டம் கடந்த 18 ஆம் திகதி ஒன்பது மேலதிக வாக்குகளாலும், இன்றைய தினம்(28) ஐந்து மேலதிக வாக்குகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே வரவு செலவு திட்டத்தை ஏன் இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்பித்து நிறைவேற்றியுள்ளீர்கள் என பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளையிடம் வினவிய போது

கடந்த 18 ஆம் திகதி ஐந்து உறுப்பினனர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையாலும், ஒருவர் சபைக்கு சமூகமளிக்காது இருந்தமையாலும் இன்றைய தினம் மீண்டும் சமர்த்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது என்றார்.

அவ்வாறு எனின் இன்றைய தினம் ஆறு உறுப்பினர்கள் எதிர்த்தும், மூவர் சபைக்கு சமூகமளிக்கவும் இல்லை எனவே மீண்ம் ஒரு தடவை வரவு செலவுத்திட்டம் சபைக்கு கொண்டுவரப்படுமா என அவரிடம் வினவிய போது இல்லை இன்றோடு எல்லாம் சரி என்று பதிலளித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net