பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு சட்ட கல்வியே தீர்வு!

பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு சட்ட கல்வியே தீர்வு!

நாட்டில் பெண்கள் சிறுவறுகளுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக சட்ட கல்வியை மாணவர்களுக்கு அடிப்படை கல்வியாக்கி பாடவிதானத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனை கொண்டுவருவதன் மூலம் தரம் 5 இல் இருந்து உயர்தர மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வினை கொண்டுவர முடியும் என்றும், இதனால் தேசிய பாதுகாப்பும், தனிமனித பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

கல்வி இராஜாங்க அமைச்சின் கடமைகளை (வியாழக்கிழமை) கல்வி அமைச்சில் பொறுப்பேற்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இன்று ஐக்கிய தேசிய கட்சி எவரது துணையுமின்றி தனித்து ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் நாட்டுக்கு தேவையான பல விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இடைப்பட்ட காலத்தில் தமிழ் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரிய பற்றாக்குறை, தொண்டர் நியமண ஆசிரியர்கள் எதிர் கொள்கின்ற நியமன பிரச்சினைகளுக்கு கல்வி அமைச்சருடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பேன்.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இ.ராதாகிருஸ்ணன் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது அவரது நோக்கத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை. தான் அவரது இலக்கினை நிறைவேற்றுவேன்.

மலையக மாணவர்களின் கல்வியினை முன்னேற்றும் பொறுப்பு தனக்கு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net