பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
வியாழக்கிழமை மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பின்னர அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவிக்கையில் “பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அந்தவகையில், சென்னை நகரிலிருந்து 14,263 சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்படும்.
மேலும் பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.