அவுஸ்ரேலியாவில் அதிகூடிய வெப்பம்!மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்ரேலியாவில் அதிகூடிய வெப்பம்!மக்களுக்கு எச்சரிக்கை!

உலகில் பல நாடுகளில் குளிர் காலம் நிலவும் நேரத்தில், அவுஸ்ரேலியாவில் தொடர்ந்தும் அனல்பறக்கும் வெப்பமான காலநிலை அம் மக்களை வாட்டி வருகின்றது.

அந்நாட்டின் மார்பிள் பார் பகுதியில் வியாழக்கிழமை பகல் நேர வெப்பநிலை 49.1C (120.4 F) ஆக பதிவாகியுள்ளது.

இதே போன்று சிட்னி, மெல்போர்ன், அடிலெய்ட் ஆகிய நகரங்களிலும் அடுத்து வரும் நான்கு நாட்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 16 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடிக்கும் வெயிலை சமாளிக்க சுமார் 25 மில்லியன் மக்கள் கடற்கரையில் காற்று வாங்கியும், நீர் விளையாட்டுகளை நிறைந்த பூங்காகளுக்கு சென்றும் அவுஸ்ரேலியர்கள் பகல் பொழுதை கடத்துகின்றனர்.

உலகமெங்கும் குளிர் காலம் உள்ள நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்து வரும் கோடை காலம் இன்னும் உக்கிரமாக இருக்குமென அவுஸ்ரேலிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள உஷ்ண வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், 65 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு நுரையீரல் பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net