எதிர்வரும் வருடம் தேர்தல் வருடமாகும்!
எதிர்வரும் வருடம் தேர்தல் வருடமாக இருக்கும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனாலும், சில தரப்பினர் தேர்தல் தொடர்பாக இருக்கின்ற அச்சம் காரணமாக தேர்தல்களை பிற்போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்று அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
எனினும், தாமும், தமது கட்சியினரும் எந்தநேரத்திலும் எவ்வாறான தேர்தலையும் எதிர்கொள்ள தயாரான நிலையிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அலுவலக பொறுப்புகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஏற்றுக் கொள்வார் என்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் றோஹன லக்ஸ்மன் பியசேன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி எதிர்கால நடவடிக்கைகள் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமித்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.