தர்மபுரம் பொது மாயாணத்தில் எரிகொட்டகையின்மையால் தகண கிரிகையின் போது சிரமம்!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குரிய தர்மபுரம் பொது மயாணத்தில் எரி கொட்டகை அமைக்கப்படாததன் காரணமாக இறுதி கிரிகைகளின் பொது பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீண்ட காலமாக குறித்த பொது மயாணம் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தர்மபுரம் கிழக்கு, மேற்கு, உழவனூர், நாதன் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தப்படுகின்ற மயாணமாக காணப்படுகின்ற போதும் அது இதுவரை காலமும் அபிவிருத்திச் செயப்படவில்லை.
குறித்த மயாணம் கரைச்சி பிரதேச சபைக்குரியதாகும் எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசாவை தொடர்பு கொண்டு வினவிய போது இவ்வருடம் சபையின் நிதியிலிருந்து ஆறு ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் எரிகொட்டகை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.