புதுவருடத்தில் பிறந்த வெளிநாட்டுக் குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம்!
கனடாவில் குடியுரிமைக்காக காத்திருக்கும் அயர்லாந்து தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை, கனடா குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நள்ளிரவு 12.01இற்கு பிறந்த அவர்களுடைய குழந்தை இந்த அதிஷ்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
கல்கரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய், 16 மணித்தியாலங்களின் பின்னர் புத்தாண்டில் இக்குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தைக்கு ஆரியா டொக்வெல் என பெயரிட்டுள்ளனர்.
ஆரியாவின் பெற்றோர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்குச் சென்று குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது தமது குழந்தை குடியுரிமை பெற்றுக்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள பெற்றோர், கனடாவில் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் பாடசாலை நிலைமைகள் என்பன சிறந்த நிலையில் காணப்படுவதாக கூறுகின்றனர்.