மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்!
பல மருந்து வகைகளின் விலைகள் இவ்வாண்டில் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நெருக்கடிகளினால் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் மருந்து தட்டுப்பாடு விரைவில் நீங்கும் எனவும் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தற்போது 200 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. காரணம் அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் இந்த மருந்துகளை உரியவர்கள் இறக்குமதி செய்யவில்லை என்றும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.