மாணவர்களின் பிரச்சினைகளை அரசியலாக மாற்றுவதற்கு சிலர் முனைகின்றனர்!

மாணவர்களின் பிரச்சினைகளை அரசியலாக மாற்றுவதற்கு சிலர் முனைகின்றனர்!

உயர்கல்வி மாணவர்களின் பிரச்சினைகளை சிலர் தங்களின் அரசியலுக்கு பயன்படுத்த முனைகின்றனரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாவது,

“உயர்கல்வி மாணவர்கள் தங்களின் பிரச்சினைக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்போது மோதல்களும் இடம்பெறுகின்றன.

ஆகையால் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில், அவர்களுடன் முதலில் கலந்துரையாடி பின்னர் அவ்விடயத்தில் உரிய தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை ஒருசிலர் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகள் ஆகியவற்றின் ஊடாக தங்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிகொள்ள முனைகின்றனர். அத்தகையவர்களை கடுமையாக எச்சரிக்கின்றேன்” என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net