மைத்திரிக்கு சு.க உறுப்பினர்கள் நெருக்கடி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி தனி குழுவொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்றுக் குழு என்ற பெயரில் செயற்படத் தீர்மானித்துள்ள இந்த அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக கொழும்பு பொது நூலகத்தில் இன்று(வியாழக்கிழமை) விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ள இந்தக் குழுவினர், இன்று காலை தமது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி தனி குழுவொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.