வெள்ளம் வீடுகளுக்குள் சென்றால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதி பத்தாயிரம் வழங்கவும்
வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றிருந்தால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இன்று(03) மாவட்டச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் , மற்றும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருந்தது.
பத்தாயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது இந்த நிலையில் அதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் இன்றைய தினம் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22563 குடும்பங்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.