கொழும்பில் பெண்களின் அந்தரங்கங்களை காணொளியாக பதிவு செய்யும் கும்பல்!
கொழும்பில் பெண்களின் அந்தரங்க பகுதிகளை காணொளியாக பதிவு செய்யும் நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நுகேகொடயில் தொழில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண்களின் அந்தரங்க பகுதிகளை அதன் முகாமையாளர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
தொழில் முகவர் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், பல வருடங்களாக பெண்களை ஆபாசமாக அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார்.
பல பெண்கள் இந்த நபரின் இரகசிய காணொளிக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொழில் எதிர்பார்ப்பில் வரும் பெண்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை, குறித்த நபர் மிகவும் நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார்.
அலுவலக முகாமையாளரின் மேசைக்கு கீழ் ஒரு பையை வைத்து அதற்குள் கையடக்க தொலைபேசி ஒன்றின் கமராவை இயக்கிய நிலையில் மறைத்து வைக்கப்படுகின்றது.
அதற்கு நேராக பெண்கள் அழைக்கப்படுகின்றார்கள். அந்த பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களின் அந்தரங்க பகுதிகள் அந்த கமராவில் பதிவாகின்றது.
அந்த கமரா சரியாக படம் பிடிக்கின்றதா என்பதனை குறித்த முகாமையாளர் தொடர்ந்து சோதனையிட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடியான கும்பல்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெண்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.