திருகோணமலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்!
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா பிரதான வீதியில் வீதி ஒழுங்கு அறிவித்தல்கள் இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
தம்பலகாமம் நாற்சந்தியின் சுற்று வட்டார பாதையில் அறிவித்தல் பலகைகள் மற்றும் வீதி ஒழுங்கு அறிவித்தல்கள் இல்லாத காரணத்தினால் பயணிகள், சாரதிகள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிண்ணியா- தம்பலகாமம் பிரதான வீதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்ட போதிலும் அதிகார சபையினரால் எந்த விதமான அறிவித்தல் பலகைகளும் பொருத்தப்படவில்லை எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியாவிலிருந்து கொழும்பு மற்றும் கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில் குறித்த அறிவித்தல் பலகைகள் இல்லாத காரணத்தினால் சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.