தெங்குசெய்கை நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை!
தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைககளை முன்னெடுக்கவுள்ளதாக தெங்குசெய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் தெங்குசெய்கை நிலங்களுக்கு பசளை பயன்படுத்துவது, ஈரத்தன்மையுடன் நிலத்தைப் பாதுகாப்பது போன்ற செயற்பாடுகளுக்குத் தேவையான அனைத்து தொழிநுட்ப ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெங்குப்பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக தெங்குசெய்கை சபையினால் நிதியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் சிறந்த விளைச்சலை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.