மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை!
நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்படுமாயின் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாடல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல் சம்பந்தமாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் நான்கு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ததாகவும், நான்கு ஆண்டுகளிலும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.