ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது பாதுகாருங்கள்!

ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது பாதுகாருங்கள் – முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை மாற்று வழிகள் இன்றி அழிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர் எனவே இந்த ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று 07-01-2019 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக கல்வி நடவடிக்கைகளிலும் பண்ணைப் பணியாளர்களாக உணவு உற்பத்தி பணிகளிலுமே தாம் ஈடுப்பட்டு வருவதாகவும்.

தாங்கள் எவ்வித இராணுவ பணிகளிலும் ஈடுப்படவில்லை இந்த நிலையில் எமது பணிக்கு நிறுத்துவதற்கு சில அரசியல் தரப்பினர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இது எமக்கு மிகுந்த வருத்தமளிக்கும் செயற்பாடு எனத் தெரிவித்த அவர்கள்

முன்னாள் போராளிகள், மாற்றுவலுவுள்ளோர்கள் என ஆயிரக்கணக்கான நலிவுற்ற பொருளாதாரத்தை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிகளில் ஈப்பட்டு வருகின்றனர்.

எங்களது பணிகளை நிறுத்திவிட குரல் எழுப்புகின்ற அரசில் தரப்பினர்கள் எங்களுக்கான மாற்று வழிகள் எதனையும் முன்வைக்காது தங்களின் குரல்களை உயர்த்தி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைப் படி எங்களது பணிகள் இல்லாது போனால் எங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தெருவுக்கு வருவதோடு, மறைமுகமாக நன்மை பெறுகின்றவர்களும் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டு விடும் எனவே எங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த மிகப்பெரும் ஆபத்திலிருந்து பாதுகாக்க உரிய தரப்பினர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net