ஹட்டனில் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தேயிலை பொதிகள் மீட்பு!
ஹட்டன் வனராஜா தோட்ட தேயிலை தொழிற்சாலையின் கலஞ்சிய சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4000 கிலோகிராம் தேயிலையை கடந்த 04ஆம் திகதி தொழிலாளர்கள் கண்டுப்பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கும் முகாமையாளர்களுக்கும் இடையில் முருகல் நிலை தோன்றியது.
தேயிலைத் தொழிற்சாலையின் களஞ்சிய பகுதியில் பொலிதின் உறைகளில் கட்டப்பட்டு கல்லத்தனமான முறையில் 24 இலட்சம் ரூபா பெறுமதியான தேயிலையை தோட்ட முகாமையாளரால் கையாடல் செய்துள்ளமையை தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தோட்ட முகாமையாளர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போது,
“இந்த விடயம் தொடர்பில் தனக்கு ஒன்றும் தெரியாது தற்போது அதிகாலையில் கொழுந்து வருவதால் தேயிலைத்தூள் அதிகளவு தயார் செய்யப்படுவதாகவும் தேயிலை களஞ்சிய சாலையில் இவ்வாறான பொதிகள் எவ்வாறு வந்தது என தனக்கு தெரியாது” எனத் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயமாக தொழிற்சாலையின் உயர் அதிகாரியிடம் தற்போது விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரகசியமான முறையில் இவ்வாறு தொடர்ச்சியாக பெறுமதியான தேயிலைத்தூள்களை விற்ற உயர் அதிகாரிகள் பங்கிட்டுக் கொண்டால் எவ்வாறு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியும்? என தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை முகாமையாளர் பெறுமதி மிக்க வாகனம், அட்டை கடி,விச ஜந்துக்களிடம் மற்றும் சிறுத்தைகள்,பன்றிகள்,குளவி என்பனவற்றிடம் இருந்து கடியோ அல்லது கொட்டுக்கு இலக்காவதில்லை
எனினும் இவர்களின் மாதாந்த வேதனம் குறைந்த பட்சம் 2லட்சம் ரூபா,தொழிற்சாலை அதிகாரிகளும் அதே போல்தான் ஒரு லட்சத்துக்கு மேல் வேதனம் பெற்று வருகின்றனர்.
ஆனால் கடுமையாக உழைக்கும் தொழிலாளிகளுக்கு நாள் சம்பளம் ஏன் இந்த பாகுபாடு என தொழிலாளர்கள் வினவுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பொகவந்தலாவ பிலான்டேசன் உயர் அதிகாரியான மஞ்சுல சமரக்கோன் அவர்களிடம் கேட்டப்போது தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலம் பதிய உள்ளதாகவும் வெகு விரைவில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.
குறித்த சம்வத்துடன் தொடர்புள்ள முகாமையாளர் மற்றும் தேயிலைத் தொழிற்சாலை உயர் அதிகாரிகள் பணியிலிருந்து விலகி உள்ளதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.