ஹிஸ்புல்லாவினது பதவிக்கு தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு கோரிக்கை!

ஹிஸ்புல்லாவினது பதவிக்கு தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு கோரிக்கை!

கிழக்கு மாகாண ஆளுநனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநனராக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா பதவி விலகியதை அடுத்து, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் குறித்த கேள்வி எழுந்தது. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு பதிலாக தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது.

இது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் தேர்தல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா பதவி விலகியதையடுத்து, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் நிலவியுள்ளதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளரினால் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியானவர் பெயரிடப்பட்டதுடன், அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதை அடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net