அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நாளை கூடுகிறது!

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நாளை கூடுகிறது!

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை (புதன்கிழமை) கூடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சபை அமர்வுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்காக வழிநடத்தல் குழு நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல விடயங்களும் திட்டமிட்டவாறு இடம்பெறுமானால், அன்றைய தினமே நிபுணர்களின் வரைபு அறிக்கை வெளியிடப்படும் சாத்தியம் உள்ளதென தெரிவிக்கப்படுகிறது

அதில் சிங்களத்தில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்றும் தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்றும் இடம்பெறுமென்றும் கூறப்படுகிறது.

அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த காலங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்பதில் தமிழ் தரப்புக்கள் உறுதியாக இருந்தன. எனினும், இடையில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளால் அப்பணி பிற்போடப்பட்டது.

எனினும், அரசியல் யாப்பு உருவாக்கத்தை எவ்வகையிலும் பிற்போடக்கூடாதென்பதில் தமிழ் தரப்புகள் உறுதியாக உள்ளன.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் நாடாளுமன்றில் சமர்க்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பின் ஊடாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென அரசாங்கமும் குறிப்பிட்டிருந்த நிலையில், அது தொடர்பான வரைபு நகல் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென கடந்த வருட இறுதியில் நாடாளுமன்றில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net