உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிம் அறிவிப்பு

உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிம் அறிவிப்பு

சர்வதேச கடன் வழங்கும் நிறுவனத்தின் ஆறு ஆண்டுகால சேவையிலிருந்து விலகுவதாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் அறிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் உலக வங்கி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

கிம்-மின் தலைமைத்துவத்தின் கீழ், 2030ஆம் ஆண்டுக்குள், கடுமையான வறுமையை ஒழிக்க, உலக வங்கி இலக்கு வகுத்திருந்தது.

இந்நிலையில், கிம்மின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் காணப்படுகின்ற நிலையில் அவரது திடீர் பதவி விலகல் குறித்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கிம்-மின் பதவி விலகலை தொடர்ந்து பெப்ரவரி முதலாம் திகதி முதல் உலக வங்கியின் இடைக்கால தலைவராக, உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டாலினா ஜோர்ஜிவா செயற்படுவார் என உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிம் யொங் கிம் முதல் முறையாக கடந்த 2012ஆம் ஆண்டு உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலம் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net