கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ: மூவர் படுகாயம்
கண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் தீடீரென ஏற்பட்ட தீப்பரவலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த மூவரும் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அக்கட்டடத்திலிருந்த ஏனைய சிலரை, பொலிஸார் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.