கிரிக்கட் பயிலும் ஜீவா – எதற்காக தெரியுமா?

கிரிக்கட் பயிலும் ஜீவா – எதற்காக தெரியுமா?

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘1983’ என்ற தலைப்பில் ஹிந்தியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது.

முதலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின் விஜய் தேவரகொண்டா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எண்ணிய இயக்குனர் கபீர் கான் நடிகர் ஜீவாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்தப் படத்துக்காக ஜீவா தினமும் இரண்டு மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net