தயாசிறி ஜயசேகரவிற்கு அறிவுரை கூறிய மஹிந்த!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கருத்து வெளியிடும் போது மிக நிதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாச வேலைகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மஹிந்த எந்தக் கட்சி என கேள்வி எழுப்பிய போது அவர் மலர்மொட்டு எனவும், தமது கட்சியினர் கிடையாது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த உள்ளிட்ட தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.