டக்ளஸ் தேவானாந்தவுக்கும் வாய்ப்பு!
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று பிரதி சபநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குழுவுக்கு புதிதாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர்.
ஜோன் அமரதுங்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சஜித் பிரேமதாஸ, தலதா அத்துகோரளை, டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்டனர்.
ஏற்கனவே இந்தக்குழுவுக்கு லஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி திஸநாயக்க, தினேஷ் குணவர்த்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், விஜித ஹேரத், மஹிந்த சமரசிங்க, மாவை சேனாதிராஜா, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச ஆகியோர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.