அசாம் மாநிலத்தில் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா!

அசாம் மாநிலத்தில் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா!

மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) அம்மாநில அரசில் அமைச்சர்களாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளன்.

இந்நிலையில், மூன்று அமைச்சர்களும் இன்று தங்களது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சர்களிடம் கொடுத்துள்ளனர்.

அசாமில் முதலமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகின்றது.

மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net