இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் இன்று (வியாழக்கிழமை) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
கடந்த மூன்று தினங்களில் பாகிஸ்தான் இராணுவம் நடத்தும் 7ஆவது அத்துமீறிய தாக்குதல் இதுவாகும்.
பூஞ்ச் செக்டாரில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 2003ஆம் ஆண்டு இணைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகின்றது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் 2936 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் 2018ஆம் ஆண்டு மாத்திரம் அதிகமாக தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.