இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு புதிய ஆளுநர் நியமனம்

இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு புதிய ஆளுநர் நியமனம்

இரணைமடுகுளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா, எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்.

இன்றைய 10-01-2019 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்ததிற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறித்தலை விடுத்துள்ளார்

ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளரைாக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றி இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபார்சுக்கு அமைய மொறட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை
மூன்று  வாரங்களுக்கு சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதனால் அக் குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net