பிரதமரை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி அதிகாரம் வேண்டும்!
பிரதமரை கட்டுப்படுத்தக்கூடிய ஜனாதிபதி அதிகாரங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் வலுவற்றதாகக் காணப்படுவதாக தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.