மனித கடத்தல்கள் அதிகரிப்பதாக ஐ.நா கவலை!

மனித கடத்தல்கள் அதிகரிப்பதாக ஐ.நா கவலை!

உலகளாவிய ரீதியில் மனித கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர். மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்ற்ன.

கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் எடுக்காத நாடுகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

கடந்த 7 ஆண்டுகளில் கடத்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் 2016-ம் ஆண்டில் கடத்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்தில் மனித உரிமை மீறல் தடுப்புச் சட்டம் பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net