மன்னார் மனித புதைகுழி விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்!
மன்னார் மனித புதைகுழி விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”மன்னார் புதைக்குழி விவகாரம் வெறும் கண்காட்சியாகிவிடாது, உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதுமாத்திரமின்றி அங்கு புதைக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களின் மரணங்கள் ஆராயப்பட்டு, குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.