வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்றார்!
வவுனியா – தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் ரியால் முன்னிலையில் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
கருணாநிதி ஹரிபிரசாத் வவுனியா மாவட்ட உயர்நீதிமன்றத்தில் குறித்த சத்தியப்பிரமானத்தை செய்துகொண்டார்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுறுதியோடு பணியாற்றுவேன் என்றும், இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும், எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிக் காப்பேன் என்றும் இன்று உறுதியளித்திருந்தார்.