அவுஸ்ரேலியாவிற்கு சென்ற ஜேர்மன் சுற்றுலா பயணியை காணவில்லை!
அவுஸ்ரேலியாவின் பின்தங்கிய பகுதியொன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் தாவரவியல் பூங்கா பகுதியில் அவரை தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் பொலிஸார் தேடி வருவதாக இன்று (வௌ்ளிக்கிழமை) பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
62 வயதான மொனிகா பில்லன் என்பவர் காணாமல் போனதாக கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
வௌியில் சென்றிருந்த அவர் அன்று இரவு வரை தான் தங்கியிருந்த பாலைவன பாம்ஸ் ரிசொட்டுக்கு மீண்டும் திரும்பவில்லை.
குறித்த பெண் கடந்த வாரம் தனது பயணத்தை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று வடக்கு பயங்கரவாத பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.