இன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

கிழக்கு, ஊவா, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் அடுத்த சில நாட்களில் குறிப்பாக 11 தொடக்கம் 13ஆம் திகதிகளில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்ற வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு, ஊவா, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய அழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்பிரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பலத்த மழை எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மற்றும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net